சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் விடப்படுவதால் எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி சமனல ஏரியின் மின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இருந்து விடுபட மாற்று மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடியாத பல மாவட்டங்களில் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அவர் இதனை இன்று (08) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.
