Wednesday, November 20, 2024
25.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிப்பு

தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலையால் பாதிப்பு

யுனிசெஃப் மதிப்பாய்வின்படி, ஏனைய அனைத்துப் பிராந்தியங்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியாவில் 76 சதவீதமான சிறார்கள் அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்காசியாவில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 460 மில்லியன் சிறார்கள் அதிக வெப்பநிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக தெற்காசியாவில் 4 சிறார்களில், 3 பேர் ஏற்கனவே அதிக வெப்பநிலை தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உலகளவில் ஜுலை மாதம் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பமான மாதமாகும்.

தெற்காசியாவில் உள்ள நாடுகள் தற்போது உலகில் அதிக வெப்பமானவை அல்ல.

ஆனால் தெற்காசியாவில் நிலவும் வெப்பம், மில்லியன் கணக்கான பாதிக்கப்படக்கூடிய சிறார்களின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களைக் கொண்டுவருவதாக யுனிசெஃப் இன் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles