கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ஏழு இந்திய பிரஜைகள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரும்பு உருக்கும் கொதிகலனில் இருந்து உருகிய இரும்பு வெளியே வீசப்பட்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.