அடுத்த சில மாதங்களில் மீண்டும் நீர் கட்டணத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய நீர் கட்டண சூத்திரம் மற்றும் நீர் கட்டண கொள்கையும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திய பல காரணிகள் காரணமாக நீர் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.