காலிமுகத்திடலில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளை அடுத்த மூன்று வாரங்களில் மூன்று பிரிவுகளின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் வகையின் பதிவு எதிர்வரும் 03ஆம் திகதி மருதானை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
இனிமேல் பதிவு செய்யப்படாத வர்த்தகர்கள் எவரும் காலி முகத்துவாரப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுராஜ் கத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் காலி முகத்திடல் நடமாடும் வியாபாரிகளுக்குத் தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று (31) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த வியாபாரிகள் பதிவு செய்த பின்னர் வழங்கப்படும் அடையாள அட்டையை வருடாந்தம் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென சூரஜ் கத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இனிமேல், காலி முகத்திடலில் நடமாடும் வர்த்தகர்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.