Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிகிச்சை பெற வந்த நோயாளி வடிகாணில் சடலமாக மீட்பு

சிகிச்சை பெற வந்த நோயாளி வடிகாணில் சடலமாக மீட்பு

களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (01) காலை வடிகாணில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மத்துகமஇ ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து எடுப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் வைத்தியசாலையின் 05வது வோர்ட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles