Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30) மெதிரிகிரிய – மஹம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த சிறுமி மஹவ – கொன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது தோழியின் சகோதரனான சந்தேக நபரால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுமி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று (31) மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles