Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாழைத்தோட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்

வாழைத்தோட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்

கொழும்பு – வாழைத்தோட்டம் – மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கெசெல்வத்த பொடிகவி என்ற காவிந்த டில்சான் டுபாயில் உள்ள கெசெல்வத்த தனுக்கவின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் வர்த்தக நிலையமொன்றின் முன்னாள் இருந்த பேளை, மோட்டார் சைக்களில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞன், வர்த்தக நிலையத்திற்குள் ஓடியதுடன், அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் காயமடைந்த 20 வயதுடைய இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் தலையில், 8 துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles