Sunday, August 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகால்நடை தீவனம் - பியர் உற்பத்திக்காக அரிசி பயன்படுத்துவது இடைநிறுத்தம்

கால்நடை தீவனம் – பியர் உற்பத்திக்காக அரிசி பயன்படுத்துவது இடைநிறுத்தம்

கால்நடை தீவனம் மற்றும் பியர் உற்பத்திக்காக அரிசி இருப்புக்களை பயன்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி, கால்நடை தீவனம் மற்றும் பியர் உற்பத்திக்காக அரிசி இருப்புக்களை பயன்படுத்துவதை இடைநிறுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் உள்ள அரிசி இருப்புக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles