பதுளை – எல்ல பிரதேச செயலகத்தில் சேவை பெறச் சென்ற நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நமுனுகுல தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் பெறுவதற்காக பிரதேச செயலகத்தின் முன்னால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த போதே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அங்கு வரிசையில் நின்ற சிலர் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.