வெல்லவாய – கொஸ்லந்த வீதியில் ஹீவல்கந்துர பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் இன்று (26) அதிகாலை பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது வாகனத்தில் நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதில் பயணித்த குழுவினருக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.