சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 12ஆம் திகதி பதவியேற்ற சின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.
அதானல், அவருக்கும் ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாகவே முக்கிய நிகழ்ச்சிகளில் சின் கேங் ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பே ஏற்கெனவே வகித்து வந்த வாங் யீ நியமிக்கப்படுவதாகவும் இன்று அறிவிக்கப்பட்டது.