Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 8,300 மெட்ரிக் டன் யூரியா நன்கொடை

இலங்கைக்கு 8,300 மெட்ரிக் டன் யூரியா நன்கொடை

இலங்கைக்கு 8300 மெட்ரிக் டன் யூரியா உரத்தை நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த யூரியா உரத்தொகையானது, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கும் குறைவாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது.

இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் விவசாயிகளுக்கு 15000 மெட்ரிக் டன் வரையான யூரியா உரம், உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles