பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.
மொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள் மற்றும் அனைத்து நுகர்பொருள் விற்பனை செய்யும் இடங்களிலும் இந்த விலைக் காட்சிப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்துவது கட்டாயமாகும்.
பொருட்களின் விலைகளை காட்சிப் படுத்தாத வர்த்தக நிலையங்களிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அனைத்து நுகர்வோரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சட்டத்தை அமுல்படுத்தாத வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.