கெசெல்கமு வாவியில் இருந்து இன்று (24) காலை சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-பகவந்தலாவ பிரதான வீதியில் சென் ஜோன் டில்லரி தோட்டப் பகுதியில் உள்ள சிறிய பாலத்தின் கீழ் வாவியில் சடலம் கிடப்பதை தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று வழங்கிய தகவலுக்கு அமைய, சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவின் சடலம் பொலித்தீன் பையில் கொண்டு வரப்பட்டதுடன், குழந்தையை பிரசவித்த தாயை கண்டுபிடிக்க நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.