Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 95 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கை 95 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Henley Passport Index வெளியிட்டுள்ள தரவுகளின் படி இலங்கை லிபியாவுடன் 95 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பட்டியலில் முதன் முறையாக ஜப்பான் முதல் இடத்தை இழந்துள்ளது.

இந்த ஆண்டு சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்ட்டாக உருவெடுத்துள்ளது.

இப்பட்டியலில் ஜப்பான் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பானிய கடவுச்சீட்டு மூலம், விசா இல்லாமல் 189 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.

ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles