Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெறுபேறுகள் வெளியாகும் வரை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி

பெறுபேறுகள் வெளியாகும் வரை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி

எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரையான காலப்பகுதியில் குறித்த பாடசாலைகளில் மாணவர்களுக்கு தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கை குறித்து ஓரளவு பாதுகாப்பைப் பெற முடியும் என்பதற்காகவே இவ் வேலைதிட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles