சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு சபை (BOI) ஆகியவை எரிபொருள் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று கைச்சாத்திட்டன.
ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்படும்.
சினோபெக் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
இதில் எரிபொருள் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனை ஆகியவை அடங்கும்.