Monday, July 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை கடற்கரையில் சுற்றித்திரியும் முதலை

தெஹிவளை கடற்கரையில் சுற்றித்திரியும் முதலை

தெஹிவளை, ஆபர்ன் சைட் வீதிக்கு முன்பாக உள்ள கடற்கரையில் குறைந்தது 8 அடி நீளம் கொண்டதாக சந்தேகிக்கப்படும் முதலை ஒன்று இன்று (12) காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 08.15 மணியளவில் கடற்கரையில் முதலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த முதலை அப் பகுதியில் உள்ள தெரு நாய்களை வேட்டையாடியுள்ளதாக அங்குள்ள மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடலுக்குச் செல்லத் தயாரான மீனவர்கள், கரையில் முதலையைக் கண்டதையடுத்து, கடற்கரையை தவிர்த்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

எனவே குறித்த கடற்கரை பகுதியில் நடமாடுவோர் மற்றும் மீனவ சமூகம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles