Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇதுவரை 1,126 விபத்துகள்: 1,192 பேர் உயிரிழப்பு

இதுவரை 1,126 விபத்துகள்: 1,192 பேர் உயிரிழப்பு

இவ்வருடம் (2023) கடந்த 6 மாதங்களில் 1192 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஜூலை 9ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில்தான் வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளால் வீதி விபத்துகளில் சிக்கி இவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

குறித்த காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரதூரமான 1126 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் மிகக் குறுகிய வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதனால் அண்மைய நாட்களில் பல விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தினால் மேலும் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனியார் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால் ஆண்டுதோறும் வீதி விபத்துகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles