பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா கொழும்பு மற்றும் பெங்கொக் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
அதன்படி,பெங்கொக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதல் விமானம் நேற்று இரவு 10 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பெங்கொக்கில் இருந்து நேற்று மாலை விமானத்தில் மொத்தம் 134 பயணிகள் வந்தனர்.
ஏர்போர்ட் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் ஏசியா கொழும்பு மற்றும் பெங்கொக் இடையே வாரத்திற்கு நான்கு முறை விமானங்களை இயக்கும் என தெரிவித்துள்ளது.
நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தாய்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது.