Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு வணிக வளாகத்தில் இந்திய பிரஜை கொலை

கொழும்பு வணிக வளாகத்தில் இந்திய பிரஜை கொலை

கொழும்பில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இரு இந்திய பிரஜைகளுக்கு இடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபர்கள் வணிக வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டவர்கள் என லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

மோதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

28 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேக நபர் கைது செய்த பொலிஸார், அவரை கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles