அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் காரணமாக ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவை பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனாலேயே எதிர்க்கட்சிகள் இந்த பிரேரணையை நாடாளுமன்றில் எதிர்த்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
உதாரணமாக முன்னர் ஒரு EPF பயனாளியால் தமது மகளின் திருமண வைபவத்துக்கு 100 பேரை அழைக்கலாம் என்றால், தற்போது 50 பேரை மட்டுமே அழைக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
EPF மற்றும் ETF என்பனவே ஒரு பணியாளருக்கு இறுதியாக மிஞ்சுகின்ற சேமிப்பாக இருக்கிறது.
இந்தக் கடன் மறுசீரமைப்பின் காரணமாக சாதாரண மக்கள் மட்டுமின்றி, வங்கி உரிமையாளர்களும் பெருவணிகர்களும்கூட பாதிக்கப்படுகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.