பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ என்ற நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பெண்ணைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் துபாயில் தங்கியிருந்து ஹரக் கட்டா மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வழிநடத்துவதாக கிடைத்த தகவல் காரணமாகவே சிவப்பு அறிவிப்பு வெளியிடப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் ஹரக் கட்டாவின் மனைவியாக பணிபுரிந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான ஆவணங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.