Tuesday, July 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளுடன் மனித எச்சங்களும் மீட்பு

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளுடன் மனித எச்சங்களும் மீட்பு

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஆழ்கடலில் வெடித்து சிதறியதாக சந்தேகிக்கப்படும் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சில சிதைவுகள் கனடாவின் செயின்ட் ஜோன் கடற்கரையில் குவிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிதைவுகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை அமெரிக்கா கொண்டு சென்ற பின்னர் விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலுக்கு என்ன ஆனது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் நிகழாமல் இருக்க விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 பேருடன் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதுடன், பயணிகள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles