Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது

IMF பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இந்தியாவின் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது என உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகக்குழு ஒன்றுடனான உரையாடல் ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நெருக்கடியின் போது 4 பில்லியன் டொலர்களை வழங்கி, இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்தது.

இந்தியா அந்த ஆதரவை வழங்கவில்லை என்றால், இலங்கை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு சென்றிருக்கும் என்றும் மொரகொட தெரிவித்துள்ளார்.

இதில் எந்த கேள்வியும் இல்லை. சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு இந்தியாவினால் மட்டுமே சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles