செய்திகள்உள்நாட்டுயுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் கைது

கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (27) அரவ்வல, சமகி மாவத்தை, பெலன்வத்த பகுதியில் குறித்த இளம் பெண்ணை சந்கேநபா் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளாா்.

19 வயதுடைய இளம் பெண்ணெ இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதோடு, பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த சம்பவத்திற்கு அவர் முகம் கொடுத்துள்ளார்

40 வயதான சந்தேக நபர் இளம் பெண்ணை தாக்கிய விதம் அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

தாக்குதலை நடத்தியவா் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவா் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த இளம் பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யுவதியை தாக்கிய நபர் நேற்று (27) மாலை தொலைபேசி கோபுரம் ஒன்றில் ஏறியிருந்த போது பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles