நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட ப்ரூனோ திவாகர இன்று (28) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் SL-Vlog உரிமையாளர் ப்ரூனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக ப்ரூனோ திவாகர இன்று (28) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.