Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோர்வூட்டில் சிறுத்தையின் சடலம் மீட்பு

நோர்வூட்டில் சிறுத்தையின் சடலம் மீட்பு

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் நேற்று (27) மாலை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தொலைபேசி அழைப்பின் பேரில், நோர்வூட் பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, ​​தோட்டத்திலுள்ள தேயிலை புதருக்கு அருகாமையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல கால்நடை வைத்திய பிரிவுக்கு கொண்டு செல்ல நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles