Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுசுப்பர் 6க்கு நுழைந்தது இலங்கை அணி

சுப்பர் 6க்கு நுழைந்தது இலங்கை அணி

உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கை அணி சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

புலவாயோ குவீன்ஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற பி குழுவிற்கான போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 82 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி, உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சுப்பர் 6 சுற்றுக்கு நுழைந்துள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களையும், சரித் அசலங்க 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

246 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஸ்கொட்லாந்து அணி 29 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக கிறிஸ் க்ரீவ்ஸ் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles