15 வயதுடைய சிறுமியுடன் பாலுறவில் ஈடுபட்டதாக ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 வயது இளைஞனை உதாசிரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
லுணுவில – கிரிமெடியானவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சிறுமியொருவர் பல நாட்களாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி தொடுவாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரது தந்தை அவர்களை கைவிட்டு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வாழ ஆரம்பித்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தொடுவாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் குறித்த இளைஞனை சிறுமி சந்தித்துள்ளதுடன், அதன் பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமிக்கும் சிறு தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், அவர் காதலனின் சகோதரி ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு சென்ற காதலனான சந்தேக நபர், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன், பின்னர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் வாழ ஆரம்பித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.