Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்விளையாட்டுவிண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகக் கிண்ணம்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உலகக் கிண்ணம்

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் சுற்றுப்போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிண்ணம் ஒரு பலூனுடன் இணைக்கப்பட்டு பூமியில் இருந்து 12,000 அடி உயரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பின்னர் இந்த கிண்ணம் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் தரையிறக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் கிண்ணம் என்ற பெருமையையும் இந்த கிண்ணம் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles