கொழும்பு காலி முகத்திடலில் உள்ள யாசகர்களை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரிதியகமவில் உள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்துக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் உள்ள யாசகர்களால் உள்ளுர்வாசிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொழுதுபோக்குக்காக காலி முகத்திடலில் கூடும் சுற்றுலாப் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் ஆகியோருக்கு பிச்சைக்கார்கள் இடையூறு விளைவிக்கிறார்கள். அங்கு சுமார் 150 யாசகர்கள் காணப்படுகிறார்கள். இவர்களை இடமாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.