ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 51 வாகனங்கள் தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லையென தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் பெறுமதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 53 வாகனங்கள் ஏனைய அரச நிறுவனங்கள், ஆலயங்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 2022 ஆம் ஆண்டில் 27 வாகனங்களுக்காக 137 இலட்சம் ரூபா பராமரிப்புச் செலவீனமாக அலுவலகம் செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட போதிலும், அந்த வாகனங்கள் முறையான அனுமதியின் கீழ் முறையான வகையில் மாற்றப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை காட்டுகிறது.