Tuesday, November 19, 2024
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்பல் விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை ஆரம்பிக்க தீர்மானம்

கப்பல் விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை ஆரம்பிக்க தீர்மானம்

இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் தீர்மானித்தது.

அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் இந்த விசேட குழு முதல் தடவையாக கடந்த 20 ஆம் திகதி கூடியதுடன், குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் அது தொடர்பில் வழக்குத் தாக்கல்செய்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதா, அது தொடர்பில் அரச பொறிமுறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா போன்ற விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகக் குழுவின் தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இங்கு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளைத் தவிர்ப்பதற்கும், அவ்வாறான அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles