Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசபந்து தென்னகோனின் ரிட் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னகோன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்தது.

ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles