இகினியாகல – பொல்வத்த பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் மாணவிகள் இருவர் அக்குருமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீகாவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
16 வயதுடைய குறித்த இரு மாணவிகளும் கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.
இரு மாணவிகளும் வீட்டை விட்டு வெளியேறி கொழும்புக்கு சென்றுள்ளதுடன், அதில் ஒரு மாணவியின் காதலனாக கூறப்படும் நபரை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர்இ,இந்த இரு சிறுமிகளையும், அக்குருமுல்லவில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞர் அவர்களுக்கு அங்கு தங்கும் வசதி அமைத்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
இவ்விரு மாணவிகளும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களின் பெற்றோர் இங்கினியாகல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.