Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்ஜோ பைடனுக்கு வைரம் பரிசளித்த மோடி

ஜோ பைடனுக்கு வைரம் பரிசளித்த மோடி

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் வரவேற்றனர்.

இதனையடுத்து இந்திய நடனத்தின் துடிப்பான கலாசாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பிரதமர் மோடி கண்டு களித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கரட் வைரம் ஒன்றை பிரதமர் மோடி பரிசளித்துள்ளார்.

பூமியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட வைரத்தின் இரசாயன மற்றும் ஒளி பண்புகளை இந்த வைரம் பிரதிபலிக்கும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இருக்கும். சூரிய மற்றும் காற்று சக்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பன்முக தன்மை வாய்ந்த முறையில் அது தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles