டெங்கு ஒழிப்பு உதவியாளர்களை நிரந்தர பணியாளராக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் மூன்று அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும்இ இந்த நடவடிக்கைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் 2016ஆம் ஆண்டு அடிப்படைத் தகைமைகள் இன்றி பணியமர்த்தப்பட்டனர். எனினும் அவர்கள் எட்டு வருடங்களாக சேவையாற்றியுள்ளனர்.
அவர்களின் தகுதியை இப்போது பரிசீலிக்க முடியாது. அவர்களை நிரந்தரமாக்குவதற்கு மூன்று அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்துள்ளேன். எனினும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்க மற்றுமொரு அமைச்சரவைப் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டுள்ளேன். இது தொடர்பாக நிர்வாக சேவைகள் திணைக்கள அதிகாரிகளை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.