UNESCO அமைப்பில் மீண்டும் இணைய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
UNESCO அமைப்பில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை தடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
கல்வி, அறிவியல், கலாசார மேம்பாட்டுக்கான ஐ.நா. பிரிவான UNESCO-வில் பாலஸ்தீனத்தை இணைக்க கடந்த 2011-ஆம் ஆண்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, UNESCO-விற்கு அளித்து வந்த நிதியுதவியை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்தின.
அத்துடன், UNESCO அமைப்பு தொடா்ந்து இஸ்ரேல் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகக் கூறி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்த நிலையில், UNESCO-வில் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வள ஆதார மேலாண்மைப் பிரிவிற்கான இணையமைச்சா் ரிச்சா்ட் வா்மா UNESCO-வின் பொது இயக்குநா் ஆவ்ட்ரே அஸூலேவிடம் சமா்ப்பித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.