Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉறங்கிக் கொண்டிருந்த நபர் கொடூர கொலை

உறங்கிக் கொண்டிருந்த நபர் கொடூர கொலை

காலி – அக்மீமன – கபுஹெம்பல பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர் இன்று (13) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கபுஹேம்பல, காத்துஹேனவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த ஒருவர், அறையில் உறங்கிக் கொண்டிருந்த நபரை தலையில் கத்தியால் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles