Friday, October 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் கடவை விபத்துக்களை தடுக்க விசேட வேலைத்திட்டம்

ரயில் கடவை விபத்துக்களை தடுக்க விசேட வேலைத்திட்டம்

அபாயகரமான ரயில் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை ரயில்வே திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி, ரயில்வே வலையமைப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் இ-கேட் அமைப்பை அமைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து CodeGen International ஆல் இந்த இ- கேட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கொடகம ரயில் நிலையத்திற்கு அருகில் இ-கேட் பரீட்சார்த்த திட்டம், அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles