Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜாங்கனே சத்தாரதன தேரர் விளக்கமறியலில்

ராஜாங்கனே சத்தாரதன தேரர் விளக்கமறியலில்

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன தேரரை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு, கோட்டை நீதிவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக தேரர் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles