மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 4 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தானியங்கி தடுப்பூசி இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தானியங்கி தடுப்பூசி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள் தீர்ந்து விட்டதன் காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தி சேவை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறித்த வடிகுழாய்களை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லாதமையே இதற்கு பிரதான காரணமாகும் என அரச கதிரியக்க தொழிநுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.