Monday, December 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெயற்கை சிறுநீரகங்கள், இரத்த நாளங்களுக்கு தட்டுப்பாடு

செயற்கை சிறுநீரகங்கள், இரத்த நாளங்களுக்கு தட்டுப்பாடு

சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சிறுநீரகம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான தேசிய மையத்தில் (சிறுநீரக மருத்துவமனை) நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே போதுமானது என்று கூறப்படுகிறது.

சிறுநீரக தானம் செய்பவர்களால் சிறுநீரகம் தானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகள் சிறுநீரக மருத்துவமனைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மாதாந்தம் நூற்றுக்கும் நூற்றி ஐம்பதுக்கும் இடைப்பட்ட சிறுநீரக நோயாளர்கள் பதிவாகுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles