Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுமகேந்திர சிங் தோனிக்கு சத்திரசிகிச்சை

மகேந்திர சிங் தோனிக்கு சத்திரசிகிச்சை

இந்தியன் பிறிமியர் லீக் தொடரை கைப்பற்றிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை தொடர்பிலேயே அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியன் பிறிமியர் லீக் தொடரின் இறுதியில் வர்ணனையாளர்களிடமும் தோனி இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

தன்மீது அளவு கடந்த அன்பினை வைத்துள்ள இரசிகர்களுக்காக அடுத்த ஐ பி எல் தொடரில் விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், உடல் தகுதி தொடர்பிலான சிகிச்சையின் பின்னரே தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தோனி தனக்கேற்பட்டுள்ள உபாதை தொடர்பில் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவுள்ளதாகவும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles