Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரைக் கோபுரத்தில் பெயரை செதுக்கிய காதல் ஜோடி கைது

தாமரைக் கோபுரத்தில் பெயரை செதுக்கிய காதல் ஜோடி கைது

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற இளம் தம்பதியினர் கோபுரத்தின் சுவரில் எழுதிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) மாலை தாமரை கோபுர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்த அதன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles