கடந்த 24 மணி நேரத்தில் காட்டு யானைகளின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது நேற்று (30) பிற்பகல் யானை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 64 வயதுடைய பக்மீகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
மேலும், காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இன்று காலை மெதவச்சிய – புனேவ – குடா ஹல்மில்லேவ பிரதேசத்தில் 73 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது பயிர்ச்செய்கை நிலத்திற்குச் சென்று வீடு திரும்பும் போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.