Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உலகம்எல் சால்வடாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறைதண்டனை

எல் சால்வடாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறைதண்டனை

எல் சால்வடார் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபுனெஸ்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதாள குழுக்களுடன் உறவு வைத்திருந்ததற்காகவும், கடமை தவறியதற்காகவும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.

அவரது முன்னாள் நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2009 முதல் 2014 வரை அந்நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றிய அவர், தேர்தல் ஆதாயங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்தது தெரியவந்தது.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி தற்போது நிகரகுவாவில் வசிப்பதுடன், அவருக்கு 2019 இல் அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது.

நிகரகுவாவின் சட்டங்களின்படி, அந்நாட்டு குடிமகன் மீது வெளிநாடுகளால் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவர்கள் அந்நாடுகளுக்கு ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles