Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பி பதவியிலிருந்து விலக மாட்டேன் - அலி சப்ரி ரஹீம்

எம்.பி பதவியிலிருந்து விலக மாட்டேன் – அலி சப்ரி ரஹீம்

பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்திய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் எம்.பி பதவியை துறக்குமாறு உத்தியோகபூர்வ கோரிக்கையை விடுக்க நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம், கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவரை பதவி விலக உத்தியோகபூர்வாக வலியுறுத்த தீர்மானித்ததாக தெரிவித்தார்.

இது குறித்து தி டெய்லி மோர்னிங் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள ரஹீம், தாம் அவ்வாறு செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

‘எனக்கு அவ்வாறான எந்த கோரிக்கையும் வரவில்லை, மேலும் இராஜினாமா செய்யும் திட்டமும் இல்லை.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles